செய்திகள்

பாகிஸ்தானில் தலிபான்கள், அரசு படைகள் கடும் மோதல்: 5 தீவிரவாதிகள் பலி

Published On 2017-03-22 12:29 GMT   |   Update On 2017-03-22 12:29 GMT
பாகிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அரசு படைகள் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பெஷாவர்:

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பழங்குடியினர் பகுதியில் அரசு தரப்பு பாதுகாப்பு படைக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

உளவுத் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில், ஒரக்ஸாய் பிராந்தியத்தில் உள்ள உத்மான்கெல் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

கமாண்டோ ஷா டவுரன் உள்ளிட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாதிகள் 5 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மேலும் பாதுகாப்பு படையை சேர்ந்த மேஜர் முதஸ்சிர் மற்றும் சிப்பாய் மடியுல்லா ஆகியோர் உயிரிழந்தனர். தேடுதல் பணியின் போது தீவிரவாதிகள் சிலரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஒரக்ஸாய் பாகிஸ்தானில் உள்ள 7 பகுதி-தன்னாட்சி பழங்குடியினர் பகுதியில் ஒன்று. அங்கு, பாகிஸ்தான் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகள் வலிமையுடன் இருந்து வருகின்றனர்.

Similar News