செய்திகள்

அமெரிக்காவில் பெற்ற தாயை கொலை செய்த இந்திய வம்சாவளி சிறுவன்

Published On 2017-03-21 00:32 GMT   |   Update On 2017-03-21 00:32 GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17-வயது சிறுவன் தனது தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளது அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17-வயது சிறுவன் தனது தாயை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளது அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நளினி தெல்லப்ரோலு என்ற பெண் முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி கழுத்து நெறிக்கப்பட்டு அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது கொலை வழக்கை கலிபோர்னியா மாகாண போலீசார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நளினியின் கொலை தொடர்பாக அவரது 17 வயது மகனான அர்னவ் உப்பலாபதி என்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். கொலையில் சிறுவன் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிறுவன் தந்து தாயை கொலை செய்ததற்கான காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.

பெற்ற தாயையே கொன்றதாக மகன் உப்பலாபதி கைது செய்யப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினரையும் நட்பு வட்டாரத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Similar News