செய்திகள்
ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா, ஆலோக்

அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்: மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது

Published On 2017-02-24 03:47 GMT   |   Update On 2017-02-24 03:47 GMT
அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் மேலோங்கி வருவதற்கு சமீபத்திய ஆதாரமாக அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி மதுபான விடுதியில் இந்திய என்ஜினீயரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.


                                                            கொலையாளி ஆடம் புரின்டன்

மும்முரமான ஆட்டத்தின்போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் என்ற என்ஜினீயர்
சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான அலோக் மடசனி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


                                                         இயன் கிரில்லாட்

இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க முயன்ற சகப் பணியாளரான இயன் கிரில்லாட்(24) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கொலையாளி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் மிசோரியில் உள்ள மதுபான விடுதியில் குடித்துவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் இருவரை கொன்று விட்டதாக உளறியுள்ளான்.

இதை அறிந்த அந்த விடுதியின் பணியாளர் அளித்த தகவலையடுத்து, விரைந்துவந்த போலீசார் கொலையாளியை கைது செய்தனர். கைதான ஆடம் புரின்டன்(51) முன்னாள் கடற்படை வீரர் என தெரியவந்துள்ள நிலையில் இந்த இனவெறி சார்ந்த படுகொலை தொடர்பான தகவல் கிடைத்ததும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Similar News