செய்திகள்

வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனா ஏப்ரல் மாதம் இந்தியா வருகை

Published On 2017-02-19 11:20 GMT   |   Update On 2017-02-19 11:20 GMT
வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா வரும் ஏப்ரல் மாதம் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாக்கா:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார்.

வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா வரும் ஏப்ரல் மாதம் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இம்மாதம் 23-ம் தேதி வங்காள தேசம் செல்கிறார்.

ஷேக் ஹசீனாவின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது மேற்கு வங்காளம் மாநிலம் மற்றும் வங்காள தேசம் நாட்டுக்கு இடையே தீராத நெடுங்கால பிரச்சனையாக இருந்துவரும் டீஸ்ட்டா நதி நீர் பங்கீடு, பத்மா பாலம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News