செய்திகள்

மேற்கு மொசூல் நகரில் 3.5 லட்சம் குழந்தைகள் சிக்கி தவிப்பு

Published On 2017-02-19 10:50 GMT   |   Update On 2017-02-20 04:53 GMT
ஈராக் நாட்டின் மேற்கு மொசூல் நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லண்டன்:

ஈராக் மற்றும் சிரியாவில் 2014-ம் ஆண்டு பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை தன்னிச்சையாக உருவாக்கினார்கள்.

ஈராக் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ். அமைப்பினரின் பிடியில் இருந்து மீட்பதற்காக, அந்த நாட்டின் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையினால் அந்த நகரத்தை சேர்ந்த சுமார் 47 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

கிழக்கு மொசூல் அரசு படையினரின் கட்டுபாட்டிற்குள் வந்துள்ள நிலையில், மேற்கு மொசூல் இன்னும் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. 

இந்நிலையில், மேற்கு மொசூல் நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் சிக்கித் தவிக்கின்றனர். லண்டன் நகரை மையமாக கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனத்தின் ஈராக் இயக்குநர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஈராக் மற்றும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளின் படைகள் மேற்கு மொசூல் நகருக்கு விரைந்துள்ளது.

குழந்தைகள் உள்ள கட்டிடங்களில் மிகவும் எச்சரிக்கையும் தாக்குதல்களை நடத்த அந்நாட்டு அரசு படைகளுக்கு வலியுறுத்தி உள்ளது.

Similar News