செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்

Published On 2017-02-19 00:26 GMT   |   Update On 2017-02-19 00:26 GMT
ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தியது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானையொட்டிய ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் ஜமாத் உத் அஹ்ரர் என்னும் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தினர் அண்மையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சேவான் நகரில் உள்ள 2 வழிபாட்டுத் தலங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் 88 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 76 பேரின் பட்டியலை பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானிடம் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரம் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் ஜமாத் உத் அஹ்ரர் இயக்கத்தின் முக்கிய தளபதி அடில் பாச்சா உள்பட 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை வரவழைத்து, தனது எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு ஆப்கானிஸ்தான் கண்டனத்தை தெரிவித்தது. 

Similar News