செய்திகள்

உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் வேறு நபரிடம் முகம் தானம் பெற்ற இளைஞர்

Published On 2017-02-18 07:42 GMT   |   Update On 2017-02-18 07:42 GMT
அமெரிக்காவில் வேறு நபரிடம் இருந்து முகம் தானம் பெற்று உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் அது இளைஞர் ஒருவருக்கு வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார்.

அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார்.

இந்த நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து ரோஸ் என்பவரின் முகத்தில் இருந்து மூக்கு, தாடைகள், வாய், உதடுகள், நாடி, மற்றும் பற்கள் ஆபரேசன் மூலம் அகற்றி ஆன்டி சான்ட்னெசுக்கு பொருத்தப்பட்டது.

இந்த ஆபரேசன் மின்னெ சாட்டாவில் ரோஸ்செய்டர் நகரில் உள்ள மாபேயி கிளினிக்கில் நடைபெற்றது. இந்த ஆபரேசனை முக சீரமைப்பு சிறப்பு நிபுணர் டாக்டர் சமீர் மார்தானி நடத்தினார்.

ஆபரேசன் முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தை பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறி இருப்பதை பார்த்து அதிசயித்தார்.

முக மாற்று ஆபரேசனை 60 பேர் கொண்ட மருத்துவ குழு நடத்தியது. மொத்தம் 56 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்காக டாக்டர்களுக்கு சான்ட்னெஸ் பாராட்டு தெரிவித்தார். கணவர் ரோசின் முகத்தை தனக்கு தானமாக அளித்த அவரது மனைவி லில்லிக்கு நன்றி கூறினார்.

Similar News