செய்திகள்

சிரியாவில் தீவிரவாதிகளுக்கு இடையில் உட்பூசல்: 41 போராளிகள் படுகொலை

Published On 2017-02-17 17:20 GMT   |   Update On 2017-02-17 17:20 GMT
சிரியாவில் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற உட்பூசலில் 41 போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
பெய்ரூட்:

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக 
சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.

இதனிடையே, சிரியாவில் ஆக்கிரமிப்புகளை உருவாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் அரசு ஆதரவு படைகள் சண்டையிட்டு 
வருகின்றன.

இந்நிலையில், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற உட்பூசலில் 41 போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கான் ஷெகுன் நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று இந்த 41 பேரும் அல்-அக்சா குழுவினரால் தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தற்போது போது தான் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News