செய்திகள்

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு: சபாநாயகர் போர்க்கொடி

Published On 2017-02-08 06:02 GMT   |   Update On 2017-02-08 06:02 GMT
அகதிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லண்டன்:

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே சமீபத்தில் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து வருகை தரும்படி டிரம்புக்கு அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்ற டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து வருகை தர ஒப்புக்கொண்டார். அப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் பேசுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் பாராளுமன்றத்தில் பேச சபாநாயகர் ஜான்பெர்கவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைய டிரம்ப் தடை விதித்துள்ளதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

மேலும் இனவெறி மற்றும் செக்ஸ் வெறிக்கும் நான் கடுமையான எதிர்ப்பாளன். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்பதை நான் ஆதரிக்கிறேன். எனவே அவர் பாராளுமன்ற கூட்டத்தில் பேச இருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News