செய்திகள்

அமெரிக்க அதிபர் பதவியேற்று முதல் சந்திப்பு: இங்கிலாந்து பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் டொனால்டு டிரம்ப்

Published On 2017-01-22 14:55 GMT   |   Update On 2017-01-22 14:55 GMT
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்பை, முதல் வெளிநாட்டு தலைவராக இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, இந்த வாரம் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசுகிறார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த வெள்ளிக் கிழமையன்று பதவியேற்றார். பின் வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்துக்குச் சென்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், முன்னாள் அதிபர் ஒபாமாவால் கொண்டு வரப்பட்ட காப்பீட்டு மசோதாவை ரத்து செய்து கையெழுத்திட்டார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே அடுத்த வாரம் 2 நாள் அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசுகிறார். அதிபராக பதவியேற்ற டிரம்ப் சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் தெரெசா மே என்பது குறிப்பிடத்தக்கது.


தடையற்ற வணிகம் மற்றும் தீவிரவாதம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News