செய்திகள்

அமெரிக்க அதிபராக கடைசி முறையாக பத்திரிகையாளர்களை சந்திக்கும் ஒபாமா

Published On 2017-01-14 04:14 GMT   |   Update On 2017-01-14 04:14 GMT
அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கும் நிலையில் தனது பதவிக்காலத்தில் கடைசி முறையாக தற்போதைய அதிபர் ஒபாமா வரும் 18-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புதிய அதிபராக வருகிற 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். எனவே, தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது.

இந்நிலையில், வழக்கமாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்திக்கும் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா, தனது பதவிக்காலத்தில் கடைசி முறையாக வரும் புதன்கிழமை (18-ம் தேதி) பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கவுள்ளார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக முதன்முறை பதவியேற்றபோது உணர்ச்சிப்பூர்வமான தனது பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்ட ஒபாமாவின் இறுதி உரையை நேரில் காண்பதற்கும், கேட்பதற்கும் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News