செய்திகள்

மொசூல் நகரை நோக்கி ஈராக் படைகள் முன்னேற்றம்

Published On 2017-01-13 20:10 GMT   |   Update On 2017-01-13 23:38 GMT
ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்பதற்கு ஈராக் படைகள் முன்னேறி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொசூல்:

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 400 கி.மீ. வடக்கே, திக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் மொசூல் நகரம்.

இந்த நகரம், 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐ.எஸ். இயக்கத்தினரின் பிடியில் உள்ளது. இந்த நகரத்தை மீட்டெடுப்பதற்காக ஹைதர் அலி அபாதி தலைமையிலான ஈராக் படைகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் அந்தப் பகுதியில் முகாமிட்டன. அந்தப் படைகள் மொசூல் நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

நேற்று முன்தினம் நிலவரப்படி அந்தப் படைகள் தொடர்ந்து சண்டையிட்டு, மொசூல் நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கிற இரண்டாவது பாலத்தை நோக்கி முன்னேறி வருகின்றன. அந்தப் பகுதியில் மொத்தம் 5 பாலங்கள் இருக்கின்றன.

அங்கு மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்பதற்கு ஈராக் படைகள் முயற்சிக்கின்றன. இதில் வெற்றி கிடைக்கிறபோது, திக்ரிஸ் ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள பாலங்களை கடப்பது எளிதாகி விடும்.

மொசூல் நகரத்தை ஈராக் படைகள் மீட்டு விட்டால், அது ஐ.எஸ். இயக்கத்தினர் மீதான பலத்த அடியாக அமைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News