செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பை மீறி மனநோயாளிக்கு தூக்கு தண்டனை

Published On 2017-01-12 07:44 GMT   |   Update On 2017-01-12 07:44 GMT
பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பை மீறி மனநோயாளிக்கு வரும் 17-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என்று உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹைசர் சையத் (வயது 55). இவர் 2003-ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்த அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றார்.

இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜெயிலில் இருந்த அவருக்கு மனநோய் ஏற்பட்டது. சிஜிசோ பெர்னியா என்ற மனநோய் அவரை தாக்கி இருந்தது.

எனவே, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்று ஐ.நா. சபையும் எதிர்ப்பு தெரிவித்தது. பல்வேறு சமூக அமைப்புகளும் இதை எதிர்த்தன.

இந்த நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாமா? என்பது குறித்து ஜெயில் துறை சார்பில் உள்ளூர் கோர்ட்டில் கேட்கப்பட்டது. அதற்கு கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாம் என அனுமதி அளித்துள்ளது.

வருகிற 17-ந்தேதி அவரை தூக்கில் போடும் படி நீதிபதி தனது உத்தரவில் கூறி இருக்கிறார். மனநோயாளியை தூக்கில் போடுவதால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News