செய்திகள்
கொலைகாரி தைநடா சில்வா, கொலையுண்ட ரயானி கிறிஸ்டினி

கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய தம்பதி

Published On 2016-12-29 07:57 GMT   |   Update On 2016-12-29 07:57 GMT
பிரேசில் கர்ப்பிணி பெண்ணை ஏமாற்றி கடத்தி சென்று வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ரியோடி ஜெனிரோ:

பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம்பெண் தைநடா சில்வா, (வயது 21). இவருடைய கணவர் பெயர் பேபியோ லூயிஸ். இவர்களுக்கு குழந்தை இல்லை.

தைநடா சில்வா கர்ப்பபையில் கோளாறு இருந்தது. எனவே, அவரால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர். இதனால் ஏதாவது குழந்தையை திருடி வைத்து கொள்ளலாம் என்று தைநடா சில்வாவும், அவரது கணவரும் முடிவு செய்தனர்.

அப்போது கர்ப்பிணி பெண்ணை கடத்தி வந்து அவரை கொன்று குழந்தையை திருடிக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைத்தனர். இதற்காக ‘வாட்ஸ்அப்’ மூலம் செய்தி ஒன்றை அனுப்பினார்கள்.

அதில், கர்ப்பிணி பெண்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு குழந்தைகளுக்கான ஆடைகளை அன்பளிப்பாக தர தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை ரயானி கிறிஸ்டினி (22) என்ற கர்ப்பிணி பெண் பார்த்து விட்டு அந்த தம்பதியை சந்திக்க சென்றார். முதலில் அங்குள்ள ரெயில் நிலையத்தில் அவர்கள் சந்தித்தனர்.

பின்னர் அவரை ஏமாற்றி தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு ரயானி கிறிஸ்டினியை வலுக்காட்டாயமாக பிடித்து வைத்து வயிற்றை கத்தியால் அறுத்து குழந்தையை எடுத்தனர்.

அந்த பெண் வயிற்றில் 9 மாத குழந்தை இருக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வயிற்றுக்குள் 7½ மாத குழந்தைதான் இருந்தது.

அந்த குழந்தையை எடுத்து வளர்க்க முடியாது என கருதிய அவர்கள் குழந்தையை கொன்று விட்டனர். வயிற்றை கிழித்ததால் ரத்தம் வெளியேறி தாயும் இறந்து விட்டார். பின்னர் அவர்கள் இருவரது பிணத்தையும் எரித்து சாம்பலாக்கி விட்டனர்.

ரயானி கிறிஸ்டினி 2 வாரத்துக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போய் இருந்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். அவர்கள் பல்வேறு கோணத்தில் விசாரித்தார்கள்.

அங்குள்ள ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, காணாமல் போன அன்று ரயானி கிறிஸ்டினி, தைநடா சில்வாவுடன் பேசிக் கொண்டு இருக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து தைநடா சில்வாவை யார் என கண்டுபிடித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது ரயானி கிறிஸ்டினியை கொன்ற வி‌ஷயத்தை கூறினார். கணவன்- மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News