செய்திகள்

கிழக்கு சிரியாவில் விமானப்படை தாக்குதலுக்கு 22 பேர் பலி

Published On 2016-12-28 08:51 GMT   |   Update On 2016-12-28 08:51 GMT
சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின்மீது விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான ராணுவப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு உதவியாக ரஷியா நாட்டு போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸூர் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போர் விமானங்கள் நேற்று நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஹோன்ஜா கிராமத்தை சேர்ந்த பத்து குழந்தைகள் உள்பட 22 பேர் பலியானதாக சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்யும் சர்வதேச கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Similar News