செய்திகள்

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் உடைந்த பகுதி கருங்கடலில் கண்டுபிடிப்பு

Published On 2016-12-26 23:26 GMT   |   Update On 2016-12-26 23:26 GMT
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் துண்டு பகுதி கருங்கடல் பகுதிக்குள் கிடைத்துள்ளது.
மாஸ்கோ:

சிரியாவில் நடைபெறும் உள் நாட்டு போர் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்க அங்கு ரஷிய ராணுவம் முகாமிட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் வீரர்களுடன் ரஷிய ராணுவ விமானம் புறப்பட்டு சென்றது.

அதில் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட ராணுவ இசைக்குழுவை சேர்ந்த 64 பேரும் இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 92 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். சோச்சி நகரில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்.

அதை தொடர்ந்து விபத்தில் பலியானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் துண்டு பகுதி கருங்கடல் பகுதிக்குள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Similar News