செய்திகள்

அதிபர் தேர்தல் வன்முறை: காங்கோவில் 22 பேர் பலி

Published On 2016-12-26 00:44 GMT   |   Update On 2016-12-26 00:44 GMT
காங்கோ நாட்டில் அதிபர் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வன்முறை சம்பத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
கின்ஷாசா:

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் அதிபரின் ஆட்சிக்காலம் கடந்த டிசம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. பதவிக் காலம் முடிந்த பின்னும் அதிபர் ஜோசப் கபிலா, ஆட்சியை விட்டு எப்போது விலகுவார் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.

இதனால் அதிபருக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின் போது, காங்கோ போலீசாருக்கும், கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்து வருகிறது.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவோர் மீது காங்கோ ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கோ நாட்டில் அதிபர் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வன்முறை சம்பத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். பென்னி நகரின் வடக்கில் 55 கி.மீ. தொலைவில் எரின்கெடி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

பென்னி பகுதியில் கடந்த இரண்டு வருடமாக தொடர்ச்சியாக வன்முறை சம்பங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

Similar News