செய்திகள்

நைஜீரியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

Published On 2016-12-09 14:46 GMT   |   Update On 2016-12-09 14:46 GMT
நைஜீரியாவில் உள்ள மார்க்கெட் ஒன்றில் இன்று அடுத்தடுத்து இரண்டுமுறை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 10 பேர் பலியாகினர்.
அபுஜா:

நைஜீரியாவின் மடகாலி நகரத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை எதிர்த்து நைஜீரியா ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். போகோ ஹராம் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இரண்டு முறை நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியானதாக நைஜீரியா போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த அகமது குலாக் இதுகுறித்து கூறுகையில் "அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பேருக்கு காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து நைஜீரியா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News