செய்திகள்

சீனாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறார் டிரம்ப் நண்பர்

Published On 2016-12-08 07:18 GMT   |   Update On 2016-12-08 07:18 GMT
சீனாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் நண்பருக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அவருடன் டொனால்டு டிரம்ப் தனது டிரம்ப் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் லோவா மாகாண கவர்னராக டெர்ரி பிரான்ஸ்டட், இவர் சீனாவுக்கான புதிய அமெரிக்க தூதராகும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அவருடன் டொனால்டு டிரம்ப் நியூ யார்க்கில் உள்ள தனது டிரம்ப் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

டெர்ரி பிரான்ஸ்டட் சீன அதிபர் ஸி ஜின்பிங்குன் நீண்ட கால நண்பர் ஆவார். அமெரிக்க தூதராக அவர் நியமிக்கப்பட உள்ள தகவல் வெளியானவுடன் அதற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லூகாங் இதுகுறித்து கூறும் போது, இதன் மூலம் சீனா- அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்படும் என்றார். இதற்கிடையே ஓய்வு பெற்ற கடற்படை தளபதி ஜெனரல் ஜான் கெல்லியை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியாக டிரம்ப் நியமிக்க உள்ளார்.

Similar News