செய்திகள்

சிரியாவில் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு

Published On 2016-12-07 22:11 GMT   |   Update On 2016-12-07 22:11 GMT
அலெப்போ நகரில் பெரும்பாலான இடங்களை இழந்துள்ள நிலையில், போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர், 6-வது ஆண்டாக நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக அதிபர் ஆதரவு படையினர், கடந்த மாதம் மத்தியில் இருந்து அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். போரினால் அங்கிருந்து 80 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.

இந்த சண்டையில், அலெப்போ நகரில் உள்ள பழைய நகரம் உட்பட நான்கில் மூன்று பகுதியை சிரிய ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் இழந்துள்ளனர்.

அலெப்போ நகரில் பெரும்பாலான இடங்களை இழந்துள்ள நிலையில், 5 நாள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேபோல் மீதமுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கிளர்ச்சியாளர்கள் முன் வைத்துள்ளனர்.

Similar News