செய்திகள்

ஜெயலலிதாவின் மறைவுக்கு அமெரிக்க தூதர் இரங்கல்

Published On 2016-12-06 03:47 GMT   |   Update On 2016-12-06 03:47 GMT
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், மாநில கவர்னர்கள், தேசிய - மாநில கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் ஆகியோர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அமெரிக்கா-இந்தியா இடையிலான நெருங்கிய உறவுகளை ஆதரித்ததுடன் தமிழ்நாட்டுக்காக பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்தவர் என்ற முறையில் ஜெயலலிதா நினைவுகூரப்படுவார்.

இந்த துயரமான நேரத்தில் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனையும் தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News