செய்திகள்

இணையத்தில் கசிந்த 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்

Published On 2016-12-04 14:16 GMT   |   Update On 2016-12-04 14:16 GMT
ஜியோனி நிறுவனத்தின் GN5005 எனும் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் இணையத்தளம் வாயிலாக கசிந்திருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்திருக்கிறது.
பீஜிங்:

சீனாவின் சான்றளிக்கும் இணையத்தளமான Teanaa ஜியோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறது. புதிய ஜியோனி GN5005 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் எல்டிஇ வசதி வழங்கப்பட்டுள்ளது. 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட TFT டிஸ்ப்ளே, 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 3 GB ரேம், 16GB இன்டர்னல் மெமரி, மற்றும் மெமரியை கூடுதலாக 128 GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

ஜியோனி GN5005 கேமராவை பொருத்த வரை 8 எம்பி பிரைமரி கேமரா, ஒற்றை எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 140 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருப்பதோடு சைடு-பெசல் வடிவமைப்பு, ஹோம் பட்டன் மற்றும் கேபாசிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வைபை, ப்ளூடூத், GPS, VoLTE, 4G, மைக்ரோ யுஎஸ்பி 2.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கொண்டுள்ள ஜியோனி GN5005 ஒற்றை நிறத்தில் வெளியாகும் என்றும் அனைவரும் வாங்கக்கூடியதாக பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.      

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஜியோனி M2017 என்ற பெயரில் இணையத்தில் வெளியானது. அச்சமயம் வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் QHD AMOLED டிஸ்ப்ளே மற்றும் 7000 எம்ஏஎச் அளவு பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1.96 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 6 GB ரேம், 128 GB இன்டெர்னல் மெமரியும், 12 எம்பி + 13 பிரைமரி கேமரா செட்டப் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 

Similar News