செய்திகள்

வீடியோ: ஹிட்லருக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த கார் புதையல்

Published On 2016-12-04 07:07 GMT   |   Update On 2016-12-04 07:07 GMT
இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் சர்வாதிகாரி அடல்ப் ஹிட்லருக்கு பயந்து பிரான்ஸ் மக்கள் ஒளித்து வைத்திருந்த பழைமையான கார்கள் தற்போது கிடைத்துள்ளது.
பாரிஸ்:

இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சியுள்ளனர்.

நாஜிக்களிம் கையில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது விலையுயர்ந்த கார்களை மத்திய பிரான்சில் உள்ள ஒரு கல் குவாரியின் சுரங்கத்துக்குள் நிறுத்தி வைத்திருந்தனர். போரின்போது அவர்களில் பெரும்பாலானோர் பலியாகி இருக்கலாம் என கருதப்படும் நிலையில் சுமார் 70 ஆண்டுகள் கழித்து அந்த கார் புதையலை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு புகைப்படக்காரர் கண்டுபிடித்துள்ளார்.

19-ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான ‘சூப்பர் மாடல்’ கார்களாக இருந்த சிட்ரோயென்ஸ், ரெனால்ட்ஸ், பியூகியோட்ஸ் மற்றும் ஓபேல் ரக கார்கள் இன்று துருப்பிடித்து, சிதிலமாகி வரலாற்று கலைப்பொருட்களாக காட்சி அளிக்கின்றன.

அந்த வீடியோவைக்காண..,

Similar News