செய்திகள்

வங்காளதேசத்தில் இந்துக்களின் 20 வீடுகளுக்கு தீ வைப்பு

Published On 2016-12-04 05:04 GMT   |   Update On 2016-12-04 05:04 GMT
வங்காளதேசத்தில் இந்துக்கள் அதிகளவில் உள்ள பகுதியில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 20 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
டாக்கா:

இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இதனால் அங்கு அவர்கள் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன.

இந்து கோவில்கள் தாக்கப்படுகின்றன. இதனால் அங்கு அவர்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டினாஸ்பூரில் போசா கிஞ்ச் உபாசில்லா பகுதியில் இந்துக்கள் அதிகஅளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்கு ரெயில்வே காலனி பகுதியில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

அதில் 20 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. தீ பரவுவதை அறிந்ததும் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறி உயிர்தப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஜூவல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கு துர்கா பூஜை நடந்தது. அதில் இருந்தே இவர் அங்கு வாழும் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்தார்.

Similar News