செய்திகள்

எச்பி ப்ரோபுக் x360 லேப்டாப் - இது மாணவர்களுக்கானது

Published On 2016-12-03 16:15 GMT   |   Update On 2016-12-03 16:15 GMT
உலகெங்கும் மாணவர்களுக்கு பயன்தரும் தலைசிறந்த லேப்டாப்பை எச்பி வடிவமைத்திருக்கிறது. உலகின் மெல்லிய லேப்டாப்பாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களை கவரும் வகையில் புதிய x360 எனும் மாற்றத்தக்க லேப்டாப் வகையினை எச்பி நிறுவனம்,  அறிவித்திருக்கிறது. உலெகங்கும் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘எச்பி ப்ரோபுக் x360 கல்வி பதிப்பு’ குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்பி நிறுவனம் வெளியிட இருக்கும் கல்வி பதிப்பு x360 லேப்டாப் வகைகள் உலகின் மெல்லிய லேப்டாப்பாக இருக்கும் என அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. மாற்றத்தக்க லேப்டாப் என்பதால் இதனை டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும். அத்துடன் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டூயல் கேமராவும் உள்ளது.

11 இன்ச் திரை கொண்ட x360 லேப்டாப் புதிய மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. திரை சேதமடையாத வகையில் டேமேஜ் ரெசிஸ்டன்ட் வழங்க கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. எச்பி x360 லேப்டாப்பின் தரத்தை உறுதி செய்ய பல்வேறு சோதனைகள் செய்திருப்பதாக எச்பி தெரிவித்துள்ளது. இதில் 30 இன்ச் உயரத்தில் இருந்து கீழே போடப்பட்டிருக்கிறது.

எச்பி x360 லேப்டாப் பயன்படுத்துவோரை கருத்தில் கொண்டு கீபோர்டுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு மிக எளிதாக சேதமடையாத படி பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பள்ளி ஆசிரியர்களுக்கென பிரத்தியேக செயலி ஒன்றையும் எச்பி வழங்கியுள்ளது. 'Set up School Pcs' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயலியை மிக எளிமையாக பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை ‘எச்பி ப்ரோபுக் x360 கல்வி பதிப்பு’ லேப்டாப்பில் 11.6 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே, இன்டெல் செலிரான் அல்லது இன்டெல் பென்டியம் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. மெமரியை பொருத்த வரை 8 GB ரேம், 64 GB இன்டர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்க உதவும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட், யுஎஸ்பி 3.1 போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.   

Similar News