செய்திகள்

உலகெங்கும் பெருகிவரும் நிறவெறிக்கு எதிரான ‘நச்’ வீடியோ

Published On 2016-11-29 07:28 GMT   |   Update On 2016-11-29 07:28 GMT
‘உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன? உடல் மட்டுமே கருப்பு - அவர் உதிரம் என்றும் சிகப்பு’ என்ற தத்துவத்தை வலியுறுத்தும் நெற்றியடி வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லண்டன்:

‘உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன? உடல் மட்டுமே கருப்பு - அவர் உதிரம் என்றும் சிகப்பு’ என்ற தத்துவத்தை வலியுறுத்தும் நெற்றியடி வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மகாத்மா காந்தியை தேசத்தந்தை என்று இந்தியர்களும், உலகத்தலைவராக வெளிநாட்டு மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்ததில் அவரது அகிம்சைப் போராட்டம் என்னும் அடக்குமுறைக்கு எதிரான சகிப்புத்தன்மை முக்கிய பங்காற்றியதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் எந்த நிறவெறி அடக்குமுறையை கண்டு அவர் கொதித்தெழுந்தாரோ, அந்த நிறவெறி ஆதிக்கத்தில் இருந்து நமது தாய்நாட்டை மீட்க வேண்டும் என்று சுதந்திர வேள்வியில் ஈடுபட்டாரோ? அதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றான ‘தீண்டாமை’ இன்றளவும் உலகம் முழுவதும் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் நிறத்தின் அடையாளத்தாலும், மதத்தின் அடையாளத்தாலும், மொழியின் அடையாளத்தாலும் பலர் புறக்கணிக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் துயரத் தொடர்கதையாக நீண்டுகொண்டே வருகிறது..,

அவ்வகையில், விமானத்தில் பயணம் செய்யும் ஒரு கருப்பின இளைஞரை அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு ‘வெண்தோல் மாது’ எப்படி நடத்துகிறார்?, அவரது இந்த செயலுக்கு அந்த விமானத்தின் விமானியும், பணிப்பெண்ணும் அளித்த பதில் என்ன? என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..,

(@Jayshetty முகநூல் பதிவுக்கு நன்றி)

Similar News