செய்திகள்
செல்சியா

அமெரிக்க அரசியலில் ஹிலாரியின் மகள் செல்சியா

Published On 2016-11-12 06:31 GMT   |   Update On 2016-11-12 06:31 GMT
ஹிலாரியின் மகள் செல்சியா அமெரிக்க அரசியலில் களம் இறங்குகிறார்.
நியூயார்க்:

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவர் 2 தடவை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவரது மனைவி ஹிலாரி. இவர் ஒபாமா அரசில் வெளியுறவு துறை மந்திரி ஆக இருந்தார்.

சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டிரம்பிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இவர்களது மகள் செல்சியா. 36 வயதான இவருக்கு திருமணமாகி விட்டது. இவரது கணவர் பெயர் மார்க் மெஸட்விங்ஸ்கி. இவர்களுக்கு சார்லோட், ஐடன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் தனது தந்தை பில் கிளிண்டன், தாயார் ஹிலாரியை தொடர்ந்து செல்சியாவும் அரசியலில் குதிக்கிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த 79 வயது மூத்த அரசியல்வாதி நீடாலோவி அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவ சபையில் உறுப்பினராக இருக்கிறார்.

முதுமை காரணமாக அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனவே அந்த இடம் காலியாக உள்ளது. எனவே அந்த இடத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் செல்சியா போட்டியிட உள்ளார்.

அற்கு வசதியாக கடந்த ஆகஸ்டு மாதம் கிளிண்டன் ஹிலாரி தம்பதி நியூயார்க்கில் தற்போது வசிக்கும் சபாகுவா பகுதியில் 1.16 மில்லியன் டாலருக்கு ஒரு வீடு வாங்கியுள்ளனர். அதை தங்களது மகள் செல்சியாவுக்காக வாங்கியதாக தெரிகிறது.

செல்சியா தற்போது மேன் காட்டனில் தங்கியுள்ளார். தேர்தலில் போட்டியிட வசதியாக தனது பெற்றோர் வாங்கியுள்ள வீட்டில் தங்க திட்டமிட்டுள்ளார்.

Similar News