செய்திகள்

லிபியா கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி

Published On 2016-11-03 14:41 GMT   |   Update On 2016-11-03 14:41 GMT
மத்திய தரைக்கடல் லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 31 பேர் உயிர்தப்பி கரை சேர்ந்துள்ளனர்.
வட ஆப்பிரிக்காவி்ல் உள்ள ஒரு நாடு லிபியா. இதன் வடக்கு எல்லையாக மத்திய தரைக்கடல் உள்ளது. வடஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர் காரணமாகவும் துருக்கி, சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் சண்டை காரணமாகவும் பொதுமக்கள் லிபியா வந்தடைகிறார்கள்.

அங்கிருந்து சமூக விரோதிகள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணமாக அவர்களை படகுகளில் ஏற்றிச் செல்கிறார்கள். ஐரோப்பிய கண்டத்தில் மத்திய தரைக்கடல் எல்லையாக இத்தாலி உள்ளது. அவர்கள் கடல்வழியாக இத்தாலி செல்கிறார்கள். அப்படி ஒரே படகில் ஏராளமான அகதிகள் செல்லும்போது அடிக்கடி நடுக்கடலில் படகு மூழ்கி ஏற்படும் விபத்து நூற்றுக்கணக்காக அகதிகள் ஒரே நேரத்தில் பலியாகும் சோகக்கதை நடைபெற்று வருகிறது.

நேற்று லிபியாவில் இருந்து இத்தாலிக்கு ஒரு படகில் 100-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணம் செய்துள்ளனர். இந்தப் படகு இத்தாலியின் லம்பேடுசா தீவை நெருங்கும்போது படகு கடலில் மூழ்கியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 39 பேர் தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர். இன்று காலை மேலும் ஒரு படகு கவிழ்ந்துள்ளது. இதில் 140 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர். இரண்டு பேர் மட்டுமே தப்பித்துள்ளது.

இந்த தகவலை இத்தாலிக்கான ஐ.நா. அகதிகளுக்கான ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.

Similar News