செய்திகள்

மனித உரிமையை மேம்படுத்துங்கள்: இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்

Published On 2016-11-01 20:08 GMT   |   Update On 2016-11-01 20:08 GMT
இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது.
கொழும்பு:

இலங்கையில் 2009-ம் ஆண்டு போருக்கு பின்னர் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். போலீ்ஸ் வன்முறை, சித்திரவதை, சிறார் தொழிலாளர் சட்ட விதி மீறல் என சகல விதமான மீறல்களும் இலங்கையில் தங்கு தடையின்றி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே, மனித உரிமை மீறல்களில் தொடர்ந்து இலங்கை ஈடுபட்டு வந்ததால் ஐரோப்பிய யூனியனின் சிறப்பு வர்த்தக உரிமைச் சலுகையை இலங்கையிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் பரித்துக் கொண்டது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் ஜான் லம்பெர்ட் கூறுகையில், “மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தால் மட்டும் தான் இலங்கை தனக்கு தேவையான சிறப்பு வர்த்த சலுகைகளை ஐரோப்பிய யூனியனிடம் இருந்து மீண்டும் பெற முடியும். கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்”  என்று தெரிவித்தார்.

Similar News