செய்திகள்

இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்க வேண்டும்: பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபை வலியுறுத்தல்

Published On 2016-10-28 07:50 GMT   |   Update On 2016-10-28 07:51 GMT
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நட்புறவு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்க வேண்டும்: பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபை வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நட்புறவு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்க வேண்டும்: பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, கராச்சி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபையின் தலைவர் அப்துல் ரவூப் ஆலம், ‘தற்போது நிலவிவரும் சூழலின்படி, இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை தொடரவேண்டிய எந்த நிர்பந்தமும் பாகிஸ்தானுக்கு இல்லை.

இதுதொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள ஒட்டுமொத்த வர்த்தக சமுதாயமும் ஒன்றிணைந்து, இந்தியாவுடன் இனியும் வர்த்தக உறவுகளை தொடர முடியாது என்பது உள்பட எந்த முடிவையும் எடுக்க தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Similar News