செய்திகள்

வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாதது: அமெரிக்க உளவு பிரிவு

Published On 2016-10-26 18:19 GMT   |   Update On 2016-10-26 18:19 GMT
அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார்.

வெளியுறவு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது ஜேம்ஸ் கூறியதாவது:-

வடகொரியர்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாது என்பதைத் நான் தெளிவாக உணர்ந்து உள்ளேன். 2014 ஆம் ஆண்டு உலகம் குறித்த வடகொரியாவின் பார்வை வேறாக இருப்பதைத் தாம் உணர்ந்து இருந்தேன்.

வடகொரியர்கள் மனநிலைப் பிறழ்வு ஏற்பட்ட நிலையில் இருப்பதாகவும், அணுஆயுதங்களைக் கைவிட அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஜான் கெர்பி (John Kirby), கிளேப்பரின் கருத்துக்குப் பதிலளிக்கையில், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமுமில்லை என்று கூறினார்.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளையடுத்து, அமெரிக்கா ஏவுகணை எதிர்ப்புக் கட்டமைப்பை கூடிய விரைவில் தென் கொரியாவில் நிறுவவிருக்கிறது. தென் கொரியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதே அதன் நோக்கம். 

Similar News