செய்திகள்

மகளை கற்பழித்த தந்தைக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் கொலைவெறி தீர்ப்பு

Published On 2016-10-23 05:24 GMT   |   Update On 2016-10-23 05:24 GMT
அமெரிக்காவில் பெற்றமகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை கற்பழித்த காமுகனுக்கு 1503 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஃபிரஸ்னோ பகுதியை சேர்ந்தவன் ரேனே லோபெஸ்(41). தற்போது 23 வயதாகும் இவரது மகள், லோபெஸ் மீது கற்பழிப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டுக்கு இடைபட்ட காலகட்டத்தில் தனது தந்தை தன்னை மிரட்டி, பலாத்காரமாக வல்லுறவில் ஈடுபட்டதாகவும், அப்போது அவரை எதிர்த்துப் போராட சக்தியற்று போனதாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக, ஃபிரஸ்னோ கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது இந்த குற்றச்சாட்டை லோபெஸ் மறுத்து விட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தனது மகளின் இளமைக்காலத்தை நாசப்படுத்திய குற்றத்துக்காகவும், இதுபோன்ற சமுதாயத்துக்கு மிகவும் தீமையான மனிதர்களை வெளியே நடமாட விடக்கூடாது என்பதற்காகவும் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி எட்வர்ட் சர்கிசியன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News