செய்திகள்

மெக்சிகோவில் 6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி வீசிய கொடூரம்

Published On 2016-10-18 10:48 GMT   |   Update On 2016-10-18 10:48 GMT
வடஅமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டில் 6 பேரின் கைகள் வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கிய வீசிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
வடஅமெரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் உள்ளது. பல்வேறு குழுக்களாக உள்ள இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. திடீர் திடீரென நடக்கும் மோதல்களில், குவியல் குவியலாக பிணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் முக்கிய ஆற்றில் பிணங்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுஒருபுறமிருக்க, உள்ளூர் மக்கள் போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தி போதைப்பொருள் கடத்தலை தடுக்க முயற்றி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 6 பேரின் கைகளை வெட்டி ஒரு பேக்கில் வைத்து தூக்கிய வீசிய கொடூரம் நடைபெற்றுள்ளது.
மெக்சிகோவின் 2-வது பெரிய நகரம் குவாடாலாஜாரா. இந்த நகரத்தின் புறநகரத்தில் 6 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது 6 பேரும் கைகள் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர். மேலும் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய கைகள் மட்டும் வெட்டப்படாமல் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

உயிருக்குப் போராடிய 6 பேரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களின் கைகள் ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநில அட்டார்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் கண்காணிப்புக்குழு ஒன்று இவர்களை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Similar News