செய்திகள்

நோபல் பரிசு வென்ற இத்தாலிய திரைப்பட கதாசிரியர் டேரியோ போ மரணம்

Published On 2016-10-13 21:20 GMT   |   Update On 2016-10-13 21:20 GMT
இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்ற இத்தாலி நாட்டு திரைப்பட கதாசிரியர் மற்றும் நடிகரான டேரியோ போ தனது 90வது வயதில் இன்று மரணமடைந்தார்.
ரோம்:

இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்ற இத்தாலி நாட்டு திரைப்பட கதாசிரியர் மற்றும் நடிகரான டேரியோ போ தனது 90வது வயதில் இன்று மரணமடைந்தார்.

இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ள அந்நாட்டின் பிரதமர் மேட்டியோ ரென்ஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டேரியோ போ மரணத்தினால் திரைப்படம், கலாசாரம் மற்றும் பொது வாழ்வில் சிறந்த நபர்களில் ஒருவரை நாடு இழந்துள்ளது.  அவரது நையாண்டித்தனம், ஆராய்ச்சி, மேடை பணி மற்றும் பன்முக கலை பணி ஆகியவை சிறந்த இத்தாலியர் ஒருவரின் உலகிற்கான பரிசு என கூறியுள்ளார்.

இடது சாரியான போ, கேலிப்பேச்சு மற்றும் அரசியல் நையாண்டித்தனத்தில் 20ம் நூற்றாண்டின் தலை சிறந்த நபர்களில் ஒருவராக இருந்தவர்.  ஆக்சிடெண்டல் டெத் ஆப் ஆன் அனார்கிஸ்ட் மற்றும் கான்ட் பே, வோன்ட் பே ஆகிய படைப்புகளினால் பிரபலம் அடைந்தவர்.

கடந்த 1969ம் ஆண்டில் அவர் திரைக்கதை எழுதி தொலைக்காட்சிகளில் வெளியான மிஸ்டெரோ பஃபோ (நகைச்சுவையான மர்மம்) என்ற அவரது படைப்பு சர்ச்சையை எழுப்பியது.  கிறிஸ்துவின் வாழ்க்கையினை பற்றி மேம்பட்ட முறையில் கூறும் வகையில் அது இருந்தது.

Similar News