செய்திகள்

நியூசிலாந்தில் இருந்து 150 ஐதராபாத் மாணவர்கள் திரும்ப அனுப்ப திட்டம்

Published On 2016-09-28 08:13 GMT   |   Update On 2016-09-28 08:13 GMT
நியூசிலாந்தில் இருந்து ஐதராபாத்தை சேர்ந்த 150 மாணவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவதாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது
ஆக்லாந்து:

நியூசிலாந்தில் இந்திய மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் மாணவர்கள் விசா எடுக்கும் போது போலி ஆவணங்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த 150 மாணவர்கள் நியூசிலாந்தில் இருந்து திருப்பி அனுப்பப்படுவதாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை நியூசிலாந்து குடியுரிமை துறை அதிகாரிகள் மேற் கொண்டுள்ளது. இதற்கிடையே இம்மாணவர்களுக்கு ஆதரவாக குடியுரிமை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆக்லாந்தில் போராட்டம் நடத்தினார்கள்.

Similar News