செய்திகள்

தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியா- சீனா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை

Published On 2016-09-27 13:01 GMT   |   Update On 2016-09-27 13:01 GMT
தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா-சீனா இடையிலான முதலாவது உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
பீஜிங்:

பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தீவிரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை தொடர்பாக இந்தியா சீனா இடையிலான முதலாவது உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

சீனாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தீவிரவாதத்தை எதிர்கொள்வது மற்றும் சர்வதேச, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக தகவல்கள் மற்றும் கொள்கைகள் இருநாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டது.

இந்தியா சார்பில் கூட்டு புலனாய்வு குழு தலைவர் ஆர்.என்.ரவி மற்றும் சீனாவின் மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகாரங்கள் ஆணைய செயலாளர் வாங் யாங்யிங் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் இருதரப்பிலும் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை இணைந்து எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய கருத்தொற்றுமை  ஏற்பட்டதாகவும், முக்கிய பிரச்சினைகள் குறித்து இருநாடுகளின் புரிதலை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News