செய்திகள்

வங்காளதேசத்தில் இறந்ததாக கருதி புதைத்த போது பிறந்த குழந்தை அழுதது - ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2016-09-26 09:22 GMT   |   Update On 2016-09-26 09:22 GMT
வங்காளதேசத்தில் பிறந்த குழந்தை இறந்ததாக கருதி புதைத்த போது அழுததால் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டாக்கா:

வங்காள தேசத்தில் மாவட்ட கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்மில் ஹுடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர். இவர் வக்கீலாக இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்தவுடன் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது.

எனவே, தீவிர சிகிச்சை அளித்த டாக்டர் பிறந்த 2 மணி நேரத்தில் அக்குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் மனம் வருந்திய குழந்தையின் பெற்றோர் அதன் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தனர்.

பின்னர் குழந்தையின் உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இரவு நேரமாக இருந்ததால் மறுநாள் காலையில் உடலை புதைக்க முடிவு செய்தனர். எனவே, குழந்தையின் உடலை அங்கிருந்த பெட்டியில் பத்திரமாக பாதுகாத்தனர்.

குழந்தையை புதைக்க மறுநாள் காலை குடும்பத்தினர் இடுகாடு சென்றனர். அப்போது பெட்டிக்குள் இருந்த குழந்தை ‘வீல்’ என அழுதது. அதைப் பார்த்த இடுகாட்டு பொறுப்பாளர் குழந்தை சாகவில்லை. உயிருடன் உள்ளது என கூறி ஒப்படைத்தார்.

உடனே அதை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக டாக்கா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News