செய்திகள்

துறைமுகங்களை மேம்படுத்தும் இந்தியாவின் சாகர்மாலா திட்டத்துக்கு இலங்கை ஆதரவு: ரனில் விக்ரம சிங்கே தகவல்

Published On 2016-09-25 01:28 GMT   |   Update On 2016-09-25 01:28 GMT
இந்தியாவில் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அமல்படுத்துகிற சாகர்மாலா திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார்
கொழும்பு:

இலங்கையில் கொழும்பு நகரில் கொழும்பு சர்வதேச கடல்சார் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அந்த நாட்டின் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் இந்தியாவில் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அமல்படுத்துகிற சாகர்மாலா திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் கூறும் போது, “சாகர்மாலா திட்டத்தில் இணைவது நமக்கு நல்லது. அது நமக்கு கேடானது அல்ல. துறைமுகங்களை கட்டுவதற்கான இந்தியாவின் சாகர்மாலா திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தியாவுடனான தொடர்புகளை வலுவாக்குவதற்கு ராஜ்ய உறவினை பயன்படுத்துவோம்” என குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா என தென் இந்திய மாநிலங்களுடனான இலங்கையின் வரலாற்று உறவினைப்பற்றியும் அவர் எடுத்துரைத்தார். சாகர்மாலா திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் சரக்குகளை எடுத்து செல்வதற்கான செலவு வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News