செய்திகள்

பலுசிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் பொருளாதர தடையை சந்திக்க நேரிடும்: ஐரோப்பியன் யூனியன் எச்சரிக்கை

Published On 2016-09-23 20:18 GMT   |   Update On 2016-09-23 20:18 GMT
பலுசிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபடும் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பியன் யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவா:

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி மக்கள் தனிநாடு கோரி போராடி வருகின்றனர். சுதந்திர கோரிக்கையை வலியுறுத்தி போராடும் பலுசிஸ்தான் அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் ஜெனிவாவில்  பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை சில தினங்களாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றும் அமைதி பேரணி நடத்தினர். இதில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் ரிசார்ட் சிசார்நெக்கி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பலுசிஸ்தான் மக்கள் மீதான மனித உரிமைகளை மீறிய கொடூர தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை மற்றும் அரசியல் ரீதியான தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News