செய்திகள்

டிரம்ப் எதிர்பாளர்கள் லண்டன் தெருவில் ஆர்ப்பாட்டம்: டபுள் டக்கர் பேருந்தில் ஊர்வலம்

Published On 2016-09-22 00:40 GMT   |   Update On 2016-09-22 00:40 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நகரில் சிலர் பேரணியில் ஈடுபட்டனர்.
லண்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக தொழிலதிபர் டிரம்ப் உள்ளார்.

இந்த தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் பராக் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நகரில் சிலர் பேரணியில் ஈடுபட்டனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட டிரம்ப் எதிர்ப்பாளர்கள், கைகளில் கொடி ஏந்தி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி டபுள் டக்கர் பேருந்தில் ஊரவலமாக சென்றனர்.

அவாஸ் என்ற அமைப்பு சார்பில் இந்த பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டிரம்பின் பேச்சால் வெளிநாடு வாழ் அமெரிக்கர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதேபோன்ற பேரணியை மெக்ஸிகோ மற்றும் பெர்லின் நகரில் நடத்த அவாஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

Similar News