செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா. சபை முன்பு பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்

Published On 2016-09-21 17:55 GMT   |   Update On 2016-09-21 17:55 GMT
பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் வன்முறைகளை கண்டித்து ஐ.நா. சபை முன்பு பலோச் தேசிய இயக்க ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியூயார்க்:

ஐ.நா. சபை பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். அந்த வகையில் இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச உள்ளார்.

நவாஸ் ஷெரீப் பேசவுள்ள நிலையில், பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் வன்முறைகளை கண்டித்து ஐ.நா. சபை முன்பு பலோச் தேசிய இயக்க ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து விடுதலைக்காக போராடி வரும் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.
 

இதனிடையே, பலுசிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின் போது பேசினார். இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Similar News