செய்திகள்

இந்தோனேசியா: ஜாவா தீவில் தொடர் மழை, வெள்ளத்துக்கு 19 பேர் பலி

Published On 2016-09-21 09:48 GMT   |   Update On 2016-09-21 09:48 GMT
இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 19 பேர் பலியாகியுள்ளனர்.
ஜகர்தா:

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 19 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனெசியா நாட்டில் உள்ள ஜாவா தீவியின் பல பகுதிகளில் கடந்த இருநாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்தது.

குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரமாக பெய்த தொடர்மழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. இம்மாவட்டங்களுக்குட்பட்ட சுமார் 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருட் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 8 மாத கைக்குழந்தை உள்பட 6 குழந்தைகளும், 7 பெண்களும் உயிரிழந்தனர். சுமேடாங் மாவட்டத்தில் ஆறுபேர் பலியாகினர். இருமாவட்டங்களிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் காணாமல்போன பத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News