செய்திகள்

சவுதி அரேபியாவில் வாடும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்

Published On 2016-09-21 00:15 GMT   |   Update On 2016-09-21 00:15 GMT
சவுதி அரேபியாவில் வாடும் 72 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் பினராய் விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
கொச்சின்:

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தவித்து வரும் கேரள மக்கள் உள்ளிட்ட 72 இந்தியர்கள் தாயகம் கொண்டுவர வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,” 72 பேரும் தற்போது தொழிலாளர் முகாமில் உள்ளனர். அவர்கள் பொருளாதார திட்டங்களுக்காக துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள்.

கடந்த ஒரு வருட காலமாக அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட வில்லை. அதேபோல் முகாமை விட்டு வெளியேறவும் அவர்களால் முடியவில்லை. முகாமில் தொழிலாளர்கள் உரிய உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்திய தூதரகத்தில் அவர்கள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்ட போதும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. 72 இந்தியர்களையும் இந்தியா கொண்டு வர மத்திய அரசு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் “ என்று குறிப்பிட்டிருந்தார்.

Similar News