தமிழ்நாடு

மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: தமிழக அரசு

Published On 2024-01-05 08:38 GMT   |   Update On 2024-01-05 08:38 GMT
  • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது.
  • ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும்.

சென்னை:

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு சேர்த்து அனுப்பப்பட்டது. இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பல குடும்பத் தலைவிகள் தங்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை அரசு நியமித்தது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10-ந்தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதமே உதவித்தொகை கிடைக்கும்.

மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளது. ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வரும் 10-ந்தேதி முதல் 1.15 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News