தமிழ்நாடு

நமது மகத்தான புலிகளை பாதுகாக்க கர்ஜனை செய்வோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

Published On 2023-07-29 19:58 GMT   |   Update On 2023-07-29 19:58 GMT
  • அழிந்து வரும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்பதில் தமிழகத்தின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது.
  • 2018ம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 306 ஆக அதிகரித்து உள்ளது.

உலக புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சர்வதேச புலிகள் தினத்தில், நமது மகத்தான புலிகளின் பாதுகாப்பிற்காக கர்ஜனை செய்வோம். அழிந்து வரும் இந்த உயிரினங்களைப் பாதுகாப்பதில் தமிழகத்தின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது.

2018ம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 306 ஆக அதிகரித்து உள்ளது.

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, காடுகளில் புலிகளின் இடத்தைப் பாதுகாத்து, காலமற்ற அழகைப் போற்றுவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News