தமிழ்நாடு

வாளையார் சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன்


ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வாளையாறு சோதனைச் சாவடியில் இரவில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்

Published On 2022-06-26 05:31 GMT   |   Update On 2022-06-26 05:31 GMT
  • கோவையில் இருந்து கேரளாவிற்கு அடிக்கடி ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
  • கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 40 ஆயிரம் குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை:

தமிழக உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ரேஷன் கெடை மற்றும் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து தமிழக-கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். கோவையில் இருந்து கேரளாவிற்கு அடிக்கடி ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. ரேசன் அரிசியை அங்கு பாலீஸ் செய்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்த எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜியுடன் வாளையாறு சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் வாகன தனிக்கை எவ்வாறு மேற்கொள்ளபடுகிறது, சோதனை செய்யும் போது பாதுகாப்பான முறையில் எப்படி சோதனை செய்வது என்பது குறித்து விளக்கம் அளித்தார். ரேசன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து போலீசாருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களி டம் கூறும்போது, கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 40 ஆயிரம் குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 901 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News