தமிழ்நாடு

மின்சார இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்- என்.ஆர்.தனபாலன் கோரிக்கை

Published On 2022-11-26 08:57 GMT   |   Update On 2022-11-26 08:57 GMT
  • மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்த பிறகே மின் கட்டணம் கட்ட முடியும் என்கிற அரசின் அவசர முடிவு தவறான தாகும்.
  • அன்றாட பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு கால அவகாசம் வழங்க வேண்டும்.

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்த பிறகே மின் கட்டணம் கட்ட முடியும் என்கிற அரசின் அவசர முடிவு தவறான தாகும். மின் கட்டணம் கட்டுவதற்கு ஆதார் கார்டை இணைப்பதற்காக கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பது போது மானதல்ல. அன்றாட பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு கால அவகாசம் வழங்க வேண்டும்.

உடனடி நடைமுறைக்கு ஒத்துவராத ஆதார் கார்டு இணைப்பு திட்டத்திற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி படிப்படியாக திட்டத்தை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News