தமிழ்நாடு

சரிந்து வரும் நீர்மட்டம்- முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2022-10-02 04:26 GMT   |   Update On 2022-10-02 04:26 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் 68.55 அடியாக உள்ளது. 1258 கனஅடிநீர் வருகிறது.
  • அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

கூடலூர்:

மழைப்பொழிவு குறைந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. எனவே 2-ம் போக நெல்சாகுபடியை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். வைகை அணையில் நீர்மட்டத்தை நிலை நிறுத்த முல்லைபெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

மேலும் நீர்திறப்பை படிப்படியாக குறைத்தனர். நேற்று 1555 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 1400 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

வைகை அணையின் நீர்மட்டம் 68.55 அடியாக உள்ளது. 1258 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2219 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, 10 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News