தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Update: 2022-06-30 07:31 GMT
  • தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
  • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை 3 நாட்களுக்கு தொடரும். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (1-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

நாளை மறுநாள் (2-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.

தமிழகத்தில் அதிகபட்சமாக காவேரிபாக்கத்தில் 6 செ.மீ, திருத்தணியில் 5 செ.மீ., வால்பாறையில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News