தமிழ்நாடு

15 மாவட்டங்களில் நாளை கனமழை- வானிலை மையம் தகவல்

Published On 2023-04-22 07:37 GMT   |   Update On 2023-04-22 08:40 GMT
  • தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.
  • சென்னை மற்றும் புற நகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

சென்னை:

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

நாளை (23-ந்தேதி) தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24 முதல் 26-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புற நகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News